நாளை மறுநாள் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
நாளை மறுநாள் (7.52019) தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.இதனால் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள் (7.52019) தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.