மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது…!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச விவசாயிகள் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மு.க.ஸ்டாலின் தலைமையில இந்த ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திமுக முடிவு செய்தவுள்ளதாகவும், இந்த போராட்டத்திற்க்கான தேதி திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் ஆலோசனை பின்னர் தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025