ஜன.31க்குள் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு!
ஜனவரி 31-க்குள் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய மாவட்ட செயலர்களுக்கு திமுக தலைமை உத்தரவு.
ஜனவரி 31-க்குள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைபடுத்தி, அவற்றில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெயர் பட்டியலை 2 நாட்களுக்குள் மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுரைத்துள்ளார். கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமூகமாக கலந்தாலோசித்து முடிவு செய்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.