தமிழகத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த 08.09.2021 அன்று நடைபெற்ற 2021-22-ஆம் நிதியாண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது:
சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் 1 கோடியே 75 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தோற்று விக்கப்படும்’,என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,முதற்கட்டமாக சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் கீழ்க்கண்ட 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை சிறப்புக்கவனம் செலுத்தி நலத்திட்டங்களை உடனுக்குடன் எவ்வித தாமதமும் இல்லாமல் செயல்படுத்திட மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தினை தேவையான பணியாளர்களுடன் நிரந்தர அடிப்படையில் தோற்றுவித்து அரசாணை பிறப்பித்திடுமாறு சிறுபான்மையினர் நல இயக்குநர் கேட்டுக் கொண்டார்.
1) சென்னை
2) வேலூர்
3) விழுப்புரம்
4) திருநெல்வேலி
5) கோயம்புத்தூர்
இந்நிலையில்,இந்த 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…