மாவட்ட நீதிமன்றங்களே ஜாமீன் அல்லது முன் ஜாமீன் வழங்க முடியும்.?

Default Image

மாவட்ட நீதிமன்றங்களுக்கு, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஜாமீன் அல்லது முன் ஜாமீன் வழங்க அதிகாரம் உள்ளது என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

கடலுர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்ததாக, விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மகாலட்சுமி என்பவருக்கு ஜாமீன் வழங்கி விருதாச்சலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சிறுமியின் தந்தை வழி உறவினர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன், விசாரணைக்கு வந்தபோது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை, மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களின்படி, மாவட்ட நீதிமன்றம் மட்டுமே இந்த வழக்குகளை விசாரிக்க முடியும் என கூறி, மகாலட்சுமிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை  ரத்து செய்தார்.

District courts can be granted bail or pre-bail.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்