சந்தையூர் பொதுமக்களின் மனித உரிமை போராட்டம்…!!

Published by
Dinasuvadu desk

சமாதான முயற்சி என்பதை கடந்து இதுநாள் வரை ஒரு வரி கூட நாம் பதிவிட வில்லை.தேவை கருதி முதல் முறையாக பதிவிடுகிறோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக முன்னிறுத்தப்பட்டுள்ள சந்தையூர் பிரச்சினையில் சுமூக தீர்வுக்கு எடுத்துக்கொண்ட உளப்பூர்வமான முயற்சிகள் இன்னமும் தொடர்கிறது.

எத்தனை நாட்கள்
எத்தனை மணி நேரம்
நேரடியாக, தொலைபேசி வழியாக செலவு செய்தது எல்லாம் விரயமாகிவிடாது.

உண்மை அறியும் குழுக்கள் நிறையவே வந்து கொண்டிக்கிறது.அவரவர் அறிந்த உண்மைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாநில எல்லையும் கடந்து முனைவர்.ஆனந்த் டெல்டும்டே அவர்கள் வரை அக்கறையோடு பேசினார்கள்.தோழர்.நல்லகண்ணு,ஜி.ராமகிருஷ்ணன்,திருமாவளவன், இயக்குநர் பா.ரஞ்ஜித்,ஆதவன் தீட்சண்யா என விசாரித்தவர்கள் பட்டியல் நீளமானது.

ஜனவரி மாத இறுதியில் மாநில பிரச்சினையாக சந்தையூர் பிரச்சினை எழுந்தது. நிலமை சிக்கலாவதை உணர்ந்து சமாதான பேச்சுவார்த்தைக்கு முயன்றோம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்,தமிழ் புலிகள் கட்சியும் பேச்சுவார்த்தைக்காகவே பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு தான் பேச்சுவார்த்தை சாத்தியமானது.

அதற்கு முன்பாகவே நமது மாவட்ட செயலாளர் தோழர்.செல்லகண்ணுவை சாதி வெறியன் என்று அவதூறு செய்து ஒரு சுவரொட்டியை விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் அய்யங்காளை வெளியிட்டு மாவட்டம் முழுதும் ஒட்டியிருந்தார்.

(தோழர் செல்லகண்ணு கிரிப்பட்டியை சொந்த ஊராக கொண்டவர்.கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தோழர் பாலுச்சாமியை தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை சிரமங்களை எதிர்கொண்டு பாதுகாத்தவர்.உத்தபுரம் உள்ளிட்ட சமகால சமூகநீதி போர்களத்தின் குறிப்பிடத்தக்க போராளி அவர்.சாதி இந்து குடும்பத்தில் பிறந்தது குற்றமல்ல.ஆனால் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அவர் மீது சுவரொட்டி ஒட்டப்பட்டது )

எனினும் பிப்ரவரி 3 பேச்சுவார்த்தை துவங்கியவுடன் சுவரொட்டி குறித்து பேச வேண்டாம் இனி நடப்பதை குறித்து மட்டும் பேசுவோம் என நாமாக முன்வந்து சொன்னதை விசிக உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் பாராட்டினார்கள்.

சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை. சுமூகமாக கடந்தது.நம்பிக்கை பிறந்தது. பேச்சுவார்த்தைக்கு சில அமைப்புகளை அழைக்காமல் புறக்கணிப்பு செய்ததாக விமர்சனம் எழுந்தது.

பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட சிரமத்தை குறிப்பிட்டிருந்தோம்.
இதில் திட்டமிட்ட நமது தவறு ஏதும் இல்லை.எங்களையும் யாரும் அழைக்கவில்லை.தானாகவே இணைந்து கொண்டோம் என்பதே உண்மை.

ஏன் பேச்சுவார்த்தை என விமர்சிக்கப்பட்டது. எதிரெதிர் துருவங்களாக தலித் மக்களை பார்க்காமல் ஒன்றுபட வேண்டிய மக்களாக இருக்க வேண்டும் என்ற அரசியல் புரிதல் தான் இதற்கு காரணம்.

பிப்ரவரி 6 அன்று தீஒஏமு,விசிக,ஆதி தமிழர் கட்சி,தமிழ்புலிகள் ஆகிய அமைப்புகளின் பிரதிநிகள் பிற்பகல் 2 மணிக்கு சந்தையூர் சென்றோம்.இரவு 9 மணி வரை சந்தையூரில் இருந்தோம்.

நிலம் குறித்து புதிய தகவல்கள்
சொல்லப்பட்டன.எனவே நில அளவை செய்வது என முடிவு செய்தோம்.
கிராமத்தை விட்டு வெளியேறி போராட்டத்தில் இருந்த அருந்ததியர் மக்களோடு சுமார் 2 மணி நேரம் உரையாடினோம்.
பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில் ஊருக்கு திரும்பி வரவேண்டும் என கோரினோம்.அன்றய நிலையில் மக்களால் அதை ஏற்கமுடியவில்லை.

நில அளவை செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பேசினோம்.அருந்ததியர் மக்கள் அதன் மீது ஆர்வம் காட்டவில்லை.நிலைமையை
தோழர்.தொல்.திருமாவளவன் அவர்களிடமும்,தோழர்.கு.ஜக்கையன் அவர்களிடமும் எடுத்து சொன்னோம்.

வெளியில் இருப்பவர்கள் தான் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக செய்திகள் பரப்பப்பட்டன.இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
பிரச்சினையின் மையப்புள்ளி சாதிய ஒவ்வாமை தான்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரயோகம் செய்யும் தன்மையில் இல்லாவிட்டாலும் ஒரு வகையான
சாதி ஆதிக்கத்தை அருந்ததியர்கள் மீது ஆதி திராவிடர்கள் பிரயோகம் செய்துள்ளனர்.இந்த நிலை மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்வது வேதனையானது.

அருந்ததியர் பகுதி சாலைக்கு பேவர்பிளாக் கல் பதிப்பதை ஆதிதிராவிடர்கள் தடுத்துள்ளனர்.தங்களது பகுதியில் சுவர் கட்டிக்கொள்வதையும் ஆதிதிராவிடர்கள் தடுத்துள்ளனர்.இதன் தொடர்சி தான் சுவர் சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இதுவெல்லாம் வெளியில் இருந்து ஏற்படுத்தப்பட்டதல்ல.உள்ளுக்குள் இயங்குகிற சாதி என்பதை ஏற்காவிட்டால் அல்லது உணரமறுத்தால் அது சமூகநீதி ஆகாது.

அதே நேரத்தில் பல பகுதிகளில் ஆதி திராவிட இளைஞர்கள் அருந்ததியர்களின் உரிமை களத்தில் உயிர் தியாகமும் செய்துள்ளதையும் ஏற்க வேண்டும். இப்போதும் மானாமதுரையில் கந்துவட்டிக் கொடுமையால் உயிர்பலியான தொந்தியம்மாள் என்ற அருந்ததியர் சகோதரிக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் விசிக முன்னணியில் நின்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. சுவரின் ஒரு பகுதியை அகற்றிவிட்டு பிரச்சனைக்கு முடிவு காண பல்வேறு முன்மொழிவுகள் ஆலோசிக்கப்பட்டது.
அவ்விடத்தில் அரசு கட்டிடம் எழுப்பி பொதுவாக்குவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. முடிவுகள் எட்டப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும்
அருந்ததியர் மக்களை சந்தித்தோம்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம்.
தோழர்.கு.ஜக்கையன் அவர்களையும் சந்தித்தோம்.
இன்றும் சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்கிறது. கடினமானது தான் என்றாலும் நமது முயற்சிகள் தொடர்கின்றன.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல் ராஜ் முகநூல் பதிவிலிருந்து…

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago