அத்திவரதர் தரிசனம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
கடந்த 36 நாள்களில் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் அத்திவரதரை தரிசனம் செய்ய இரண்டு நாள்கள் கூட ஆகலாம் எனவே அதற்கேப்ப பக்தர்கள் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.பக்தர்களுக்காக மேற்கு கோபுர வாசல் அகலப்படுத்தவும் , 16- 17ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 16-ம் தேதி காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உள்ளுர் விடுமுறை எனவும் ,17 -ம் தேதி பிற்பகல் 12மணிக்கு கிழக்கு கோபுரவாசல் மூடப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்களுக்கு மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.