கள்ளக்குறிச்சி; கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்க்ளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பல்வேறு தகவல்களை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதில், இதுவரை, கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 165 பேர் உள்நோயாளிகளாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த 165 பேரில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிசை பெற்று வருகின்றனர். அதில், 50-60 பேர் உடல்நலம் தேறி வருகின்றனர். 5,6 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 30 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதான் இப்போதைய நிலைமை.
சிகிச்சை பெற்றுவபவர்களை 24 மணிநேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். நேற்று வரை 29 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இறுதி சடங்குகளுக்கு காவல்துறையினர் உதவி வருகின்றனர்.
நேற்று வரை கள்ளக்குறிச்சியில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லை. 27 நபர்களுக்கு நேற்று அரசு நிவாரணம் வழங்கப்பட்டது. எங்களது வேண்டுகோள் ஒன்றுதான், கள்ளச்சாராயம் அருந்தியதாக சந்தேகம் இருந்தால் கூட சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
முதல்வரின் அறிவுறுத்தல் பெயரில், பாதிக்கப்பட்ட அனைவரின் பொருளாதார நிலை குறித்து அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். கள்ளச்சாராய நடமாட்டத்தை தடுக்க சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…