தூத்துக்குடியில் 14 கண்மாய்கள் 7 கோடியில் தூர் வாரி சீரமைபணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!
தூத்துக்குடியில் 14 கண்மாய்கள் 7 கோடியில் தூர் வாரி சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் பொட்டை குளத்தின் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் 20 லட்சம் செலவில் தூர் வாரி கரைகளை பலப்படுத்த கூடிய பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் தூத்துக்குடியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான மழைபொழிவு இருக்கும் எனவும், 70% மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கும்.
மழை காலத்திற்கு முன்பதாக நீர்நிலைகளை தூர்வாரும் நோக்கத்தில் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொது பணித்துறை குளங்கள் தூர் வரப்படுகின்றன. இந்நிலையில் குலையன்கரிசல் ஊராட்சி பொதுமக்கள் விவசாயிகள் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 20 லட்சம் தூர் வாரி கரைகளை பலப்படுத்த கூடிய பணிகள் செய்யப்பட உள்ளது. மேலும் குலையன்கரிசல் பகுதியில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மூலம் எரிவாயு குழாய் பதிக்க கூடிய பணியும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.