சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

தவெகவின் நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை (ஜன.10) தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

TVK Vijay

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026 சட்டமன் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை அவர் ஆலோசனை நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடந்த அலோசனை கூட்டத்தில், தவெக கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்களை இந்த மாத இறுதிக்குள் நியமிக்கும்படி தலைவர் விஜய் கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியானது. கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்

இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாதத்திற்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டதாக கூறப்பட்ட நிலையில்,  4 மாதங்களாக நடைபெற்று வந்த மாவட்ட செயலாளார் தேர்வு குறித்து நாளை இறுதிச் சய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்