நாளை வேட்புமனு தாக்கல்! இதற்கு அனுமதியில்லை: தேர்தல் அலுவலர் முக்கிய அறிவிப்பு

Lok Sabha Elections: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்கும் நிலையில் அது தொடர்பில் மாவட்ட தேர்தல் அலுலவர் ராதாகிருஷ்ணன் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கும், வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளார்.

Read More – கோவை பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல்..! பிரதமர் மோடி மீது பரபரப்பு புகார்

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடக்கிறது.

Read More – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! அன்புமணி ராமதாஸ்.!

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்  ராதாகிருஷ்ணன் கூறும் போது, “சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களானது நாளை (20.03.2024) முதல் 27.03.2024 வரை காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை பெறப்படும். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

Read More – 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை!

வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு செய்ய அனுமதிக்கப்படுவர். மாலை 3.00 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதி கிடையாது” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்