இந்த மாத தொடக்கத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானது. அதிலும், இந்த புயலின் போது, சென்னை பெருமளவில் பாதிப்பை சந்தித்தது. சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது, பல நாட்களாக பார்த்து பார்த்து சேர்ந்த உடைமைகள் எல்லாம் இந்த மழை வெள்ளத்தில் பாதிப்படைந்தது. ஆனால், இன்னும் சில இடங்களில் மழைநீர் வடியாமல் தான் உள்ளது.
இந்த நிலையில், அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!
வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி நிவாரணத் தொகை காண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. இன்று வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கன் பெற்றவர்கள், 17 முதல் 21-ம் தேதி வரை ரேஷன் கடைகளில், டோக்கனில் கொடுத்த தேதி, நேரத்துக்கு சென்று தங்களுக்கான நிவாரண தொகையை பெற்று கொள்ளலாம்.
அரசு, பொதுத்துறை உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக் கணக்கு விவரத்துடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குடும்ப அட்டை இல்லாமல் இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நிவாரணம் பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…