ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா ரூ.3,000 விநியோகம் செய்யப்படுவதாக புகார்.
தேர்தல் ஆணையம்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரிசுப்பொருட்கள் விநியோகம், பணப்பட்டுவாடா தடுப்பு, அனுமதியின்றி இயங்கிய தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைப்பு மற்றும் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர் மேற்கொண்டு வருகிறார்.
பணப்பட்டுவாடா:
இந்த நிலையில், வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு முதல் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலை கொண்டு அரசியல் கட்சியினர் தலா ரூ.3,000 வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. அரசியல் கட்சியினர் கொடுத்த பணம் குறித்து வாக்காளர்களே தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு வெட்டி, சேலை:
ஜீவானந்தம் வீதி, கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் என குற்றசாட்டு எழுந்துள்ளது. அதேபோல், அதிமுக, திமுக என இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு வெட்டி, சேலை மற்றும் பணம் வழங்க தொடங்கியிருப்பதாகவும், அதிகாலை 2 மணி முதல் 4 மணி பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், வாக்காளர்களுக்கு 3000 ரூபாய் திமுகவினருக்கு, 2000 ரூபாய் அதிமுகவினரும் கொடுப்பதாவும் கூறப்படுகிறது.
மற்ற கட்சியினர் குற்றசாட்டு:
ஈரோடு கிழக்கு தொகுதி போட்டியிடும் மற்ற கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள்கே, தேர்தல் அலுவலரிடம் ஜனநாயக முறைப்படி, நியாயமாக தேர்தல் நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்து, பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து குற்றசாட்டியுள்ளனர்.
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…