பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.
10-ஆம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது.இதனிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,10-ஆம் வகுப்பு பொதுத்தோவு எழுதிய மாணவா்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்ததந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களைச் சரிபாா்த்து தயாராக வைத்துக்கொள்ளவும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தலைமையாசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும்.
இதைத்தொடா்ந்து, சான்றிதழ்களை இன்று முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு விநியோம் செய்ய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பணிகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.