நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம்..!
திமுகவில் வரும் 21-ம் தேதி நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம்
நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் திமுகவில் வரும் 21-ம் தேதி தொடங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட திமுக தலைமை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.10,000, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500 விருப்ப மனு கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.