நாடாளுமன்ற தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகம் கட்சி தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், விருப்ப மனுக்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் 19ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை செயலாளர் அன்பகம் கலை, துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் விருப்ப மனு வினியோக பணியில் ஈடுபட்டனர்.
2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு… த.வெ.க. தலைமை அதிரடி உத்தரவு!
முதல் நாளான இன்று திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் 20 பேர் விருப்ப மனுக்கள் வாங்க வந்திருந்தனர். பகல் 12 மணிக்கு மேல் அவர்கள் ஒவ்வொருவராக விருப்ப படிவத்தினை ரூ.2 ஆயிரம் செலுத்தி வாங்கிச் சென்றனர். விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.