இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு இடையில் இன்று ( ஏப்ரல் 2ம் தேதி ) முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது .எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3-ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் இதற்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .
ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்த ரூ.1000 மற்றும் விலையில்லா ரேசன் பொருட்களுக்கான டோக்கன், ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீட்டிற்க்கே வந்து வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …