பாஜகவில் இருந்து விலகி.. மீண்டும் திமுகவில் இணைந்த எஸ்.கே.வேதரத்தினம்.!

மீண்டும் திமுகவில் இணைந்த எஸ்.கே.வேதரத்தினம்
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் 1996, 2001 மற்றும் 2006 ஆகிய மூன்று முறை தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.கே.ராஜரத்தினம். திமுகவில் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து 4-வது முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் பிடித்து வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2016 -ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சமீபத்தில் வெளியான பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வேதரத்தினம் பெயர் இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில், எஸ்.கே.வேதரத்தினம் நேற்று காணொலி மூலம் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் மூன்று இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் எஸ்.கே.வேதரத்தினத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025