சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 3 நாட்களுக்கு மேல் தேக்கி வைக்காமல் விநியோகிக்க வேண்டும் ….!அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 3 நாட்களுக்கு மேல் தேக்கி வைக்காமல் விநியோகிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.அவர் கூறுகையில், பொதுமக்களுக்கான தண்ணீரின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.சாதாரண காய்ச்சல் என்று நோயாளிகள் வந்தாலும் டெங்கு உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் .டெங்குவால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.