ராகுல் பிரதமராவதில் ப.சிதம்பரத்திற்கு விருப்பமில்லை: சுதர்சன நாச்சியப்பன்
- காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வர சிதம்பரத்திற்கு விருப்பமில்லை என அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிடும் 10 தொகுதிகள் காண வேட்பாளர்களை அறிவிப்பதில் மிகவும் தாமதமாகியது. குறிப்பாக சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது. இதற்கு முன்னதாக அந்த தொகுதியில் போட்டியிட்ட சுதர்சன நாச்சியப்பன் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிந்தது.
ஆனால் பின்னர் பல குழப்பங்களுக்கு பின்னர் பார் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது பா.சிதம்பரத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார் சுதர்சன நாச்சியப்பன். குறிப்பாக சிதம்பரத்தின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் சிவகங்கை தொகுதி மக்கள் கோபமாக உள்ளனர் என்று கூறினார்,
மேலும் , ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்று அவர் செயல்படுகிறார், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக வெல்லக்கூடாது அதன் பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் பிரதமர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார் பா சிதம்பரம் இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.