ஊராட்சி மன்ற தலைவர் அவமரியாதை! இனி நடக்காது! – தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்
தலித் சமுதாய ஊராட்சி மன்ற தலைவரை அவமரியாதையாக நடத்தியது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த செயலை கண்டித்து பிரபலங்கள் பாலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிற நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சென்னையில் ஒரு கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தலித் சமுதாய ஊராட்சி மன்ற தலைவரை அவமரியாதையாக நடத்தியது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.’ என தெரிவித்துள்ளார்.