நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் உறுப்பினர்கள் தகராறு செய்துள்ளனர், இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னசந்திரம் என்னும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை கிராமத்தை சேர்ந்தவர் தான் வினோத்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார், இதனைத் தொடர்ந்து திப்பம்பட்டி மற்றும் பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், சாமிநாதன் ஆகிய இருவரை அவர் வேலை செய்த நிறுவனத்தின் உறுப்பினர்களாக சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை பார்த்து வந்த வர்த்தக நிறுவனம் நஷ்டம் அடைந்தால் நிறுவனம் அண்மையில் மூடப்பட்டுள்ளது. இதனால் நிறுவனத்தை நடத்தி வந்தவர்களும் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர். நிறுவனம் மூடப்பட்டதால் உறுப்பினர்களாக வினோத்குமார் இணைத்துவிட சாமிநாதன் மற்றும் சீனிவாசனுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பை வினோத்குமார் தான் தரவேண்டும் என இருவரும் மிக தகராறு செய்து வந்ததால் வினோத்குமார் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே சமாதான உடன்படிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்திருந்தாலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து வினோத்குமார் இடம் தகராறு செய்து வந்ததுடன் அடியாட்களை வைத்து மிரட்டி உள்ளனர். வினோத்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சீனிவாசன் மற்றும் சாமிநாதன் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் பணத்தையும் 10 சவரன் நகை ஆகியவற்றையும் இரண்டு கறவை மாடுகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக வினோத்குமார் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் அவரது தந்தை முருகேசன், தாய் மற்றும் சகோதரனுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்கிதுள்ளார். இதனை பார்த்த தீயணைப்புத் துறையினர் காவல் துறையினரின் உதவியுடன் அவர்களின் முயற்சியை தடுத்து அவர்களை காப்பாற்றி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…