நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் தகராறு – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி!

Default Image

நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் உறுப்பினர்கள் தகராறு செய்துள்ளனர், இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னசந்திரம் என்னும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை கிராமத்தை சேர்ந்தவர் தான் வினோத்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார், இதனைத் தொடர்ந்து திப்பம்பட்டி மற்றும் பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், சாமிநாதன் ஆகிய இருவரை அவர் வேலை செய்த நிறுவனத்தின் உறுப்பினர்களாக சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை பார்த்து வந்த வர்த்தக நிறுவனம் நஷ்டம் அடைந்தால் நிறுவனம் அண்மையில் மூடப்பட்டுள்ளது. இதனால் நிறுவனத்தை நடத்தி வந்தவர்களும் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர். நிறுவனம் மூடப்பட்டதால் உறுப்பினர்களாக வினோத்குமார் இணைத்துவிட சாமிநாதன் மற்றும் சீனிவாசனுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பை வினோத்குமார் தான் தரவேண்டும் என இருவரும் மிக தகராறு செய்து வந்ததால் வினோத்குமார் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே சமாதான உடன்படிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்திருந்தாலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து வினோத்குமார் இடம் தகராறு செய்து வந்ததுடன் அடியாட்களை வைத்து மிரட்டி உள்ளனர். வினோத்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சீனிவாசன் மற்றும் சாமிநாதன் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் பணத்தையும்  10 சவரன் நகை ஆகியவற்றையும் இரண்டு கறவை மாடுகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக வினோத்குமார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் அவரது தந்தை முருகேசன், தாய் மற்றும் சகோதரனுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்கிதுள்ளார். இதனை பார்த்த தீயணைப்புத் துறையினர் காவல் துறையினரின் உதவியுடன் அவர்களின் முயற்சியை தடுத்து அவர்களை காப்பாற்றி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - Trump - Zelensky Meeting
tvk admk
England vs South Africa
tn rainy
Telangana Tunnel Collapse
ICC CT 2025 - Afganistan Cricket team
vijay - stalin - pm modi