சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் விடுதலை ? சுதாகரன் விடுதலை தாமதமாக வாய்ப்பு

Default Image

சசிகலாவை தொடர்ந்து அடுத்த மாதம்  5-ஆம் தேதி சிறையில் இருந்து இளவரசியும் விடுதலையாகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி  மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது அதை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது. பின்னர், 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறை நிர்வாகம் பதில்:

சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. இதனால், சசிகலா விடுதலை குறித்த தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ் கேட்ட  நரசிம்மமூர்த்திக்கு, அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இளவரசி அடுத்த மாதம்  5-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் விடுதலையாகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியான சுதாகரன் இன்னும் அபராதத்தொகை ரூ.10கோடி செலுத்தாததால் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்