தள்ளுபடி செய்யப்பட்ட மனு -உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றார்.கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதற்கு பின் இந்த வழக்கை நிராகரிக்கோரி திமுகவின் கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.மேலும் சந்தானகுமார் மனுவை ஏற்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்துள்ளார்.விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025