இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
இந்துக்களை அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யகோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் தி.க. தலைவர் கீ.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசினார். இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆ.ராசாவின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக மனுவில் ஜோஸத் புகார் தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை வேப்பரி காவல்நிலையத்தில் தான் புகார் அளித்துள்ளதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். எனவே, ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், ஆ.ராசா மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அது முடித்து வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனால், அரசு தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…