மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

DPI Suspend

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில் உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்.

பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகம் சார்பில் பள்ளிமாணவர்கள் தேர்வு செய்யப்படாதது குறித்து பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்து கொள்வது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியும் அதனை முறையாக நடவடிக்கை எடுக்காத முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கையை முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்