7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் அனுமதிக்க முடியாது கோரிய வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல் இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.இன்று அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது.
இதனிடையே 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த தனது மகளுக்கு 7.5 % இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று அறிவழகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் அனுமதிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அரசு பள்ளியில் முழுமையாக பயின்ற மாணவர்களுக்கே 7.5 % இட ஒதுக்கீடு என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…