தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி.!

Default Image

தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, இது மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம்.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் இணைத்திருக்க கூடிய பார்களை மூடவேண்டும் என்று கோரிக்கையுடன் வழக்கறிஞர் சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதார தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்கள் இருக்கின்ற காரணத்தால் அந்த பகுதிகளில் விபத்துக்கள் அதிகளவில் நடப்பதாகவும், பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாகவும் என குற்றசாட்டை முன்வைத்தார்.

இதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் நீதிபதிகள்,  மதுக்கடைகள், பார்களை மூடுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில்  தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். அதேசமயம், பார்கள் உரிமையில்லாமல் சட்டவிரோதமாக இயங்கினால் அது சம்மதமாக மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை வழங்கி அனுமதி தந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்