#BREAKING: மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.!

Published by
murugan

மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது.

இதையடுத்து, வழக்கறிஞர் எம்.எல்.ஸ் ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில், பொது முடக்க காலத்தில் நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால்,  வழக்கத்தைவிட மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

எனவே அதை இரண்டு, இரண்டு மாதங்களாக பிரித்து அதன் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் விளக்கம் அளித்தது.

அதில், ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்திற்கு உட்பட்டே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று  சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. தனிப்பட்ட நபர்கள் குறைகள் இருப்பின் அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என நீதிபதிகள் கூறினர்.

Published by
murugan

Recent Posts

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

27 minutes ago

18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!

கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…

43 minutes ago

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…

57 minutes ago

ஈரோடு இடைத்தேர்தல்.. நாதகவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த நோட்டா.!

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…

1 hour ago

விராட் வெளியே., ஸ்ரேயாஸ் உள்ளே! இது கடவுளின் விருப்பம்! ஹர்பஜன் சிங் கருத்து!

ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…

2 hours ago

ஒரு கேப்டனாக பாடம் கற்றுக்கொண்ட ரஷீத் கான்… தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க இணைய தொடர்.!

ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…

2 hours ago