பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டில் பணி பெற மதம் மாறியிருந்தால் வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாதவரை நூலக அதிகாரியாக நியமித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய கல்வி தகுதியை ஆராயாமல் பல்கலைக்கழகம் முறையாக விசாரணை செய்யாமல் பணி நியமனம் செய்தது தவறு, பின்னர் பதவி உயர்வு வழங்கியதும் தவறு என்றும் அது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்த பதவியை வழங்கியது தொடர்பான உத்தரவை ரத்து செய்ததுடன், அவருக்கு பாதி ஊதியத்திற்கான ஓய்வூதியத்தை மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனத்தின்போது வெளிப்படைத்தன்மை பின்பற்றவேண்டும். போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக தெரியவந்ததால் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பணிநீக்கம் செய்து ஊதியத்தை திரும்ப வசூலிக்க வேண்டும் எனவும் பல்கலைகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இடஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெறுவதற்காகவும், பதவி உயர்வு பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் பணி நியமனத்தை ரத்து செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…