நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23 -ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
மூவரின் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து கொலை தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.விசாரணையை தொடர்ந்து சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…