தவெக விருது விழாவில் மாணவர்களுக்கு தடபுடலாக பரிமாறப்பட்ட உணவுகள்.!

Published by
கெளதம்

சென்னை :  தமிழகத்தில் கடந்த 10, +2 பொதுத்தேர்வில், சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, திருவான்மியூரில்  உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் வைத்து முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி விஜய் கௌரவித்தார்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு, சால்வை அணிவித்து கவுரவித்த விஜய், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் வைர மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்தார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மாணவர்கள், நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துச்சென்றனர்.

இந்த விழாவில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, “Say no to temporary pleasures, Say no to drugs” என்ற இரண்டு வாசகத்தை சொல்ல வைத்து மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்ததார்.

இந்த பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு அறுசுவை சைவ உணவு வழங்கப்படுகிறது. சுடச்ச்சுட வடை, அப்பளம், அவியல், பாயாசம், சாதம், மோர், பக்கோடா என மெனுவில் நிறைய உள்ளது. மேலும் உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் என்று 15 வகையான உணவுகள் மாணவர்களுக்கு தடபுடலாக பரிமாறப்பட்டு வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago