தவெக விருது விழாவில் மாணவர்களுக்கு தடபுடலாக பரிமாறப்பட்ட உணவுகள்.!
சென்னை : தமிழகத்தில் கடந்த 10, +2 பொதுத்தேர்வில், சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் வைத்து முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி விஜய் கௌரவித்தார்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு, சால்வை அணிவித்து கவுரவித்த விஜய், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் வைர மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்தார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மாணவர்கள், நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துச்சென்றனர்.
இந்த விழாவில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, “Say no to temporary pleasures, Say no to drugs” என்ற இரண்டு வாசகத்தை சொல்ல வைத்து மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்ததார்.
இந்த பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு அறுசுவை சைவ உணவு வழங்கப்படுகிறது. சுடச்ச்சுட வடை, அப்பளம், அவியல், பாயாசம், சாதம், மோர், பக்கோடா என மெனுவில் நிறைய உள்ளது. மேலும் உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் என்று 15 வகையான உணவுகள் மாணவர்களுக்கு தடபுடலாக பரிமாறப்பட்டு வருகிறது.