கீழடி அகழாய்வில் 6 அடி நீளமுள்ள சுவர் கண்டுபிடிப்பு.!
இந்த 6- ம் கட்ட அகழாய்வில் 6 அடி நீளமுள்ள சுவர் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிகள், இம்மாதம் 15 -ம் தேதிக்குள் நிறைவுபெறுகிறது.
இந்த 6- ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், எடைக்கற்கள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், மனித எலும்புக்கூடுகள், சங்குகள், கரிம படிமங்கள், பானைகள் என மொத்தம் மொத்தம் 1786 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 6- ம் கட்ட அகழாய்வில் தற்போது 6 அடி நீளமுள்ள சுவர் ஒன்றை கண்டறியப்பட்டது. அது 5 அடி ஆழத்திற்கு தோண்டிய போது அகலமான 2 செங்கல் வரிசை கொண்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.