கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் ஐந்து அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியானது கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் கீழடியில் மட்டுமல்லாமல் கீழடி சுற்றி இருக்கக் கூடிய கொந்தகை, அகரம், மணல் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழி, விலங்குகளின் எலும்புக் கூடுகள், பாசிமணிகள் சங்கு வளையல்கள் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஐந்து அடுக்குகள் கொண்ட உறைகிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறைகிணறு மேலும் சில வகை அடுக்குகள் இருக்கும் என்பதால் அதனை முழுமையாக கண்டறியும் பணியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்த உறை கிணறு இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர், ஆயிரக்கணக்கான பொருட்கள் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருவது தொல்லியல் துறையினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். வரும் செப்டம்பர் இறுதியில் இந்த ஆராய்ச்சியானது நிறைவடைய கூடிய நிலையில் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…