பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை
நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை.
நாளை அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பணிஓய்வு, வாரஓய்வு, மாற்றுப்பணி ஓய்வுக்கு அனுமதி பெற்றவர்களுக்கு அனுமதி ரத்து என்றும் அறிவித்துள்ளது. போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் நாளை பணிக்கு வர வேண்டும் என்றும் மாற்று ஓய்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். மேலும் நாளை விடுப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் விடுப்பு அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, 14-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி நாளை முதல் போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.