வரும் திங்கள் மற்றும் செய்வாய் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை வரவுள்ளதால் ஏற்கனவே சனி , ஞாயிறு என பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகிவிட்டனர்.
தொடர் விடுமுறை கருத்தில் கொண்டு, வரும் அக்டோபர் 20 வெள்ளி மாலை முதலே சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. 20, 21, 22 ஆகிய தேதிகளில் மொத்தமாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நாகை – இலங்கை இடையேயான பயண கப்பல் சேவை நிறுத்தம்.! ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்.!
இதனை தொடர்ந்து, தற்போது அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்க கூடாது என்றும், அப்படி மீறி விடுமுறை எடுத்தால் அந்த விடுமுறை DO, CO, CL, EL, SL ஆகிய பிரிவுகளின் விடுப்பு வழங்கப்படாது.
அதனையும் மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர் , நடத்துனர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் அக்டோபர் 20,21,22 ஆகிய தேதிகளில் தாம்பரம், பூந்தமல்லி புறநகர், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலைங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆயுத பூஜையை அடுத்து தீபாவளி விடுமுறை தின சிறப்பு பேருந்து பற்றிய முக்கிய அறிவிப்பு வரும் அக்டோபர் 28ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…