கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..? விளக்கமளித்த மநீம..!

கமலஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கமலை அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களுடைய நிலைகுறித்து கேட்டறிந்தனர்.
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கமலஹாசன் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரவி வரும் நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நீதி மய்ய செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘தலைவர் அவர்கள் மருத்துவமனையிலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால், நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்.’ என பதிவிட்டுள்ளார்.
வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 30, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025