கடற்கரையில் உள்ளவர்கள் கலைந்து செல்ல பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு ..!
கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது பேரிடர் மேலாண்மைத் துறை.
இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பேரிடர் மேலாண்மைத் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.புயல் பாதிக்க வாய்ப்புள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் வேடிக்கை பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்.‘கஜா புயல்’… முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.