பேரிடர் நிதி ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்..!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.  அதில் தென்மாவட்டங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு உதவ நான் வைத்த கோரிக்கை ஏற்று உடனே அமித்ஷா உதவிகளை செய்தார். தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பால் நேற்று மாலை வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஒன்பது ஹெலிகாப்டர் மூலம் மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. மீட்பு பணியில் விமானப்படை, கடற்படை மூலம் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. உள்துறை அமைச்சகத்தில் இருந்த இரண்டு கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து அங்குள்ள நிலைமைகளை 24 மணி நேரம் கவனித்து வந்தனர். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். வெள்ளம் வடிவதற்கு முன்பே மீட்பு பணியில் மத்திய குழு இறங்கியது.

இந்த ஆண்டிற்கான மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதி 900 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய 900 கோடி தொகையில் முதல் தவணையாக ரூ.450 கோடி கொடுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது தவணை தொகை தென் மாவட்ட மழைக்கு முன்பாகவே முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 12-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கான இரண்டாவது தவணை நிதி கொடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்