திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மாற்றுத்திறனாளி தப்பிக்கும் காட்சிகள்!
மலை அடிவாரத்தில் கல்லடாவி என்ற பகுதியில் புதிதாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மாற்றுத்திறனாளி தப்பிக்கும் காட்சிகள்.
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழையில் வ.உ.சி நகர் 11-வது தெருவில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன.
மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட பாறை விழுந்ததில், இரண்டு வீடுகள் சேதமடைந்தாக கூறப்படுகிறது. இதில், புதைந்த வீடுகளுக்குள் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு பக்கம், புயல் கரையை கடந்த செய்தி ஆறுதலை தந்தாலும், மறுபுறம் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகள் தத்தளித்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
இந்த நிலையில், குப்பநத்தம் அணை அருகே மலை அடிவாரத்தில் கல்லடாவி என்ற பகுதியில் புதிதாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை காண்பதற்காக பொதுமக்கள் குவிந்த போது, திடீரென மாற்றுத்திறனாளி ஒருவர் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து தப்பிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலை அடிவாரத்தில் கல்லடாவி என்ற பகுதியில் புதிதாக நிலச்சரிவு !… நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மாற்றுத்திறனாளி தப்பிக்கும் காட்சிகள் !
🔴இடம் : திருவண்ணாமலை குப்பநத்தம் அணை.. #Tiruvannamalai | #Rainfall | #CyclonicStormFengal | #FengalCyclone | #HeavyRain | #Landslide|… pic.twitter.com/55qfijiE8M
— KumudamNews (@kumudamNews24x7) December 2, 2024
நன்றி குமுதம் செய்திகள்..