வாரணாசியில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாரணாசி : புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில், இன்னும் பரபரப்பை கிளப்பும் வகையில் ரயில்களில் இடமின்றி, பயணிகள் சிலர் ரயிலின் ஏசி பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைய முயன்ற சம்பவங்கள் நடந்தது.
இதனையடுத்து, பயணிகள் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும், கூட்டம் இன்னும் குறைந்தபாடு இல்லை. கூட்டநெரிசல் அதிகமாக இருப்பதால், வாரணாசியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்திற்கு திரும்ப முடியாமல் வேதனையில் இருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 6 தமிழக வீரர்கள் வாரணாசிக்கு சென்றுள்ளனர். போட்டி முடிந்த பிறகு இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், கூட்டம் அதிகமாக இருப்பதால் மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியாத சூழ்நிலை நிலவியுள்ளது.
இதன்காரணமாக வீரர்கள் ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டு தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுத்து எங்களை தமிழகத்திற்கு அழைத்து வர உதவி செய்யவேண்டும் என்று ஊடகம் வாயிலாக கேட்டுக்கொண்டார்கள். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை
அதன்படி, மாற்றுத்திறனாளி வீரர்கள் கோரிக்கை வைத்த உடனே தமிழக அரசு வீரர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை SDAT (விளையாட்டு விடுதி) உறுப்பினர் செயலர் மேக்நாத ரெட்டி தனியார் ஊடகத்திற்கு அளித்தப்பேட்டியில் உறுதி செய்துள்ளார். வாரணாசியில் சிக்கிய வீரர்களை விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025