தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்குனர் எச்சரிக்கை..!
தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என அனைத்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு.
மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவடையவுள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு அனைத்து தேர்வுத்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து தேர்வுத்துறை இயக்குனர் எச்சரிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும். அனுப்ப தவறினால் அந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், மதிப்பீட்டு பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 19-ஆம் தேதிக்குள் நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.