இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்என படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் அதிகமானோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளிவந்து நான்கு நாட்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று சென்னை அபிராமபுரத்தில் உள்ள செக்க சிவந்த வானம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக பாலன், தனசேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…