முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் இயக்குனர் பாக்யராஜ்.!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்வாகியுள்ள இயக்குநர் பாக்யராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது.
முடிவில், இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றிபெறவே பாக்யராஜ் மீண்டும் எழுத்தாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளராக பதவியேற்று கொண்டதையடுத்து இயக்குநர் பாக்யராஜ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவருடன் செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் – தலைவர் திரைப்பட இயக்குநர் திரு. பாக்யராஜ், செயலாளர் திரு. லியாகத் அலிகான், பொருளாளர் திரு. பாலசேகரன் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். pic.twitter.com/yskBNrnSmy
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 17, 2022