கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு…! – கனிமொழி எம்.பி.
இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்ட பேரவையில் இன்று இலங்கை தமிழர்களுக்கு, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, கனிமொழி எம்.பி அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன எதிர்காலம், தன் பிள்ளைகளின் எதிர்காலம் என்று எல்லாம் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில், முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பரிதவித்த இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு.’ என பதிவிட்டுள்ளார்.
எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி. கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு.@arivalayam @mkstalin (2/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 27, 2021