சட்ட மாணவர்களுக்கும் டிசம்பர் 20-ஆம் தேதி முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார் அறிவித்துள்ளார்.
சட்ட மாணவர்களுக்கும் டிசம்பர் 20-ஆம் தேதி முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடந்தாண்டு 2019 முதல் நிலவிவரும் கொரோணா பெருந்தொற்றின் கரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக மூன்று பருவத் தேர்வுகளையும் இணையவழி வாயிலாகவே நடத்தியது. இதனால் இக்கல்வியாண்டின் முதலாம் பருவத் தேர்வுகள் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டதுபோல் இணையவழியில் நடத்தப்படுமா என்ற ஐயம் மாணவர் தரப்பில் எழுகின்றது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.சந்தோஷ் குமார் அவர்கள் அளித்த தெளிவுரையில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்து பயிற்று வகுப்புகளும் நேரடி வகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது என்றும் சட்டக் கல்வியின் தரத்தினை பேணும் வகையில் பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் இனி நோடித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும் என்றும் அத்தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதியில் தொடங்கி சீர்மிகு சட்டப் பள்ளி உட்பட பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் நேரடித் தேர்வாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…