முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடி குடிநீர் திட்டம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

Default Image

முல்லை பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

மதுரையில் இன்று 69.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்துள்ள தமிழக முதல்வர், 3.95 கோடி மதிப்பிலான இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று கட்டிடங்களை திறந்து வைத்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கும் இன்று முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மதுரை மாநகர மக்களுக்காக அம்ரூட் திட்டத்தின் கீழ் 1,295 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் லோயர் கேம்பில் இருந்து குழாய் மூலமாக 125 எஎல்டி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விழாவில் முதல்வருடன், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, வேலுமணி, உதயகுமார், ராஜன் செல்லப்பா மற்றும் சில எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்