10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்தா..? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி இறுதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும், 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து தற்போது,10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.